வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 215 (24/02/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.
இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 215 ற்கான கேள்விகள்
அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 08, 29
இடமிருந்து வலம்
01 – 05 தெய்வத்தின் மீழ் பிறப்பு எனவும் குறிப்பிடப்படும்.
10 – 12 உடலின் தட்ப வெட்ப நிலைகளுக்கு ஏற்றவாறு உணரக்கூடியது.(குழம்பி வருகிறது)
22 – 24 சங்க காலத் தமிழர்களால் தன்மைகளையும் தொழில்களையும் பொறுத்து பாகுபடுத்தப்பட்டது.(குழம்பி வருகிறது)
25 – 28 அகிம்சைக்கு எதிரான செயற்பாட்டை தோற்றுவிக்கும். (வலமிருந்து இடம்)
31 – 34 பிரிக்கப்பட்ட பகுதி எனவும் பொருள் தரும் (குழம்பி வருகிறது)
34 – 36 ஓர் நாட்டின் வளங்களுள் முக்கியமானவற்றுள் ஒன்று
மேலிருந்து கீழ்
01 – 25 குழந்தைகளுக்கான கண் திருஷ்ட்டி ஏற்படாமல் தடுக்க முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது
14 – 32 தெய்வத்திடம் சரணாகதி அடையும் போது பலரும் உச்சரிப்பது
03 – 21 தலைமுறைக்கு கடத்தப்படுவதால் மட்டுமல்ல ஒரு குழந்தையால் முதலில் அறியப்படுவது என்பதாலும் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.
10 – 28 பண்டைய காலத்தில் குறிக்கப்பட்ட அதிகாரிகள் மாத்திரமே இதனுள் நுழைய அனுமதி உண்டு (கீழிருந்து மேல்)
11 – 23 இசையில் குறியீட்டு வடிவத்தில் முதன் முதல் தோன்றியது
06 – 18 இடை ஆபரணமான இதனை பிரிவுத்துயரில் நலிவுறும் பெண்ணுடன் இலக்கியங்கள் தொடர்பு படுத்தின
24 – 36 சூரிய ஒளி உட் புகாத இருண்ட பகுதி எனவும் குறிப்பிடலாம்
வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 214 ன் விடைகள்
இடமிருந்து வலம்
01 – 06 மாங்கல்யம்
10 – 11 ஊமை
13 – 16 அன்னம்
19 – 22 பருவம்
32 – 34 புகழ்
மேலிருந்து கீழ்
01 – 13 மாயம்
13 – 31 செல்வம்
26 – 32 யாழ்
09 – 27 இன்பம்
16 – 34 அரும்பு
11 – 29 ஊஞ்சல்
06 – 24 நூதனம்
30 – 36 பாரி
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 214ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.லாலா ரவி, பிரான்ஸ்
திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்
திரு . திக்கம் நடா, சுவிஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன் நோர்வே
திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம், ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 214 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!