Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 313 (06/03/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 313 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 06, 29

இடமிருந்து வலம்

01 – 05 கண்ணுக்கான தெளிவு
09 – 12 மழைத்துளியினூடாக ஊடுருவும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பு (வலமிருந்து இடம்)
15 – 17 ஆதிகால வர்த்தகத்தில் முக்கியத்துவம் பெற்றது (குழம்பி வருகிறது)
19 – 22 பண்பாட்டியலில் முதலில் இடம் பிடிக்கும் உபசரிப்பு (வலமிருந்து இடம்)
26 – 28 மன அழுத்தங்களுக்கு காரணமெனினும் சிலருக்கு அதுவே அமைதியைத் தருகிறது
31 – 33 உடலியக்கத்தின் பயிற்சிக்கானது (வலமிருந்து இடம்)
33 – 35 தயாரித்தலுக்கானதாக அமையும் ஆதாரம்

மேலிருந்து கீழ்

01 – 13 சமாதானத்திற்கானது
13 – 25 மருத்துவ நன்மைகள் பலவற்றை உள்ளடக்கியது (கீழிருந்து மேல்)
08 – 26 பல வகைக் கோணங்களில் அமைவது (குழம்பி வருகிறது)
15 – 21 கதைக்கான மூலம்
05 – 23 பாரம்பரிய கலைவடிவம் (கீழிருந்து மேல்)
12 – 30 துதி எனவும் பொருள் தரும்
30 – 36 காற்றழுத்த மாற்றத்தால் பாதிப்படையக் கூடியது (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி 313 (06.03.2022)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 312 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்

திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 312ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 இலக்கியம்
08 – 10 வயது
10 – 12 தத்து
14 – 17 அகிம்சை
21 – 24 பாராட்டு
28 – 29 மொழி
31 – 33 தாவணி

மேலிருந்து கீழ்

01 – 25 இரத்தம்
14 – 26 அல்லி
03 – 27 பாக்கியம்
23 – 35 மொட்டு
12 – 36 தவிடுபொடி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 312ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி சித்ரா பவன் நோர்வே
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திரு திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 312ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!