Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 309 (30/01/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 309 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 23, 27

இடமிருந்து வலம்

01 – 05 எந்திர வாழ்க்கையில் அருகி விட்ட இனிய நிகழ்வுகளுள் ஒன்று
08 – 12 இந்தியாவைத் தாயகமாக கொண்ட இது மங்கலத்துக்குரியது
15 – 17 தஞ்சையின் அடையாளமான இவை புவியீர்ப்பு விசையின் செயற்பாட்டிற்கேற்ப உருவாக்கப்படுகின்றன (வலமிருந்து இடம்)
21 – 22 அனைத்துப் பாகங்களும் தந்துதவும் இது தமிழர் வாழ்வியலில் முக்கிய பங்கு வகிப்பது (வலமிருந்து இடம்)
28 – 30 தூரத்தை அளக்கப் பயன்பட்ட வேதகால அலகு (வலமிருந்து இடம்)
31 – 33 ஏற்றதாக அமையும் சூழல் (வலமிருந்து இடம்)
33 – 36 அடிமை மனித இனங்கள் பலவும் இழந்தவற்றுள் ஒன்று (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 07 குறைபாடுகள் அதிகம் இருக்குமிடத்து இதனை பலரும் கருத்தில் கொள்வதில்லை
13 – 31 ஒருவரின் பாடல் திறமையை வெளிப்படுத்த இதுவும் பயன்படும்
08 – 26 வேள்வி பூஜைகளுக்கு அதிகம் பயன்படும் இது அவ்வேளையில் தேவ வடிவமாக பார்க்கப் படுகிறது (குழம்பி வருகிறது)
10 – 12 சில உடல் உபாதைகளால் ஏற்படும் (குழம்பி வருகிறது)
29 – 35 இசைவைத் தெரிவித்தல்
06 – 18 மிகச்சிறியது
24 – 36 மனத்தை ஒரு நிலைப்படுத்தி மேற்கொள்ளும் தியானம் (குழம்பி வருகிறது)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 308 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி

திருமதி ரதிதேவி தெய்வேந்திரம்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 308ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 பளிங்கு
05 – 06 எடை
14 – 16 தட்டு
16 – 18 கொடுமை
19 – 22 அங்கம்
26 – 29 தகராறு
32 – 35 உயரம்

மேலிருந்து கீழ்

01 – 19 பஞ்சம்
19 – 31 நாளம்
08 – 32 ஆதங்கம்
04 – 22 அடுக்கு
06 – 12 ஆடை
18 – 3 பெருமை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 308ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திரு திருமதி. உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திரு திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 308 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!