வாடகை கார் சாரதி மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!

சாஸ்கட்சுவானில் வாடகை கார் சாரதி மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

200 பிளொக் அவனியூ பகுதியில் நேற்ற (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கார் சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, குறித்த மூவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது தாக்குதல் மற்றும் வழிப்பறி பிரிவில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொது புலனாய்வு பிரிவின் துப்பறியும் விசாரணைக் குழு இதன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அத்தோடு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !