வாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு

1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்ததால் அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தொடர் சிகிச்சை காரணமாக வாஜ்பாய்க்கு சிறுநீரக தொற்று சரியாகி வருகிறது. ஆனாலும், டாக்டர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அவரது உடல் நிலையை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனை சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயின் உடல் நிலை குறித்து அவரது உறவினர்களிடம் அவர் விசாரித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !