வாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்

பிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் போதும் அவர்களே குழப்பம் விளைவித்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

இன்றைய நாடாளுமன்ற செயற்பாடுகளின் பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

வாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுக்கும் முயற்சியில் மஹிந்த தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டதாகவும், சபாநாயகரை தாக்க முற்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், மஹிந்தவின் உரை மீது நம்பிக்கையில்லையென கூறி நடத்தப்பட்ட வாக்கெடுப்பும் நிறைவேற்றப்பட்டதென சபாநாயகர் அறிவித்ததாக சுமந்திரன் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !