வாக்குரிமை இருந்தாலும் செயற்படுத்த மாட்டேன்

வாக்குரிமை இருக்கின்ற போதிலும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதலாக யாருக்கும் வாக்களிக்காமல் செயற்பட்டு வருகின்றேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாத்தறை – தெனியாய பிரதேசத்தில் வாக்காளர்களை தெளிவூட்டும் வேலைத்திட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றதன் பின்னர் வாக்கு வழங்குவதை நிறுத்திவிட்டேன் எனக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு எனது வாக்குரிமையினை வழங்கும் போது நான் பக்கசார்பாக செயற்பட்டு விட்டதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் இதன் காரணமாகவே வாக்குரிமையினை நிறுத்திவிட்டேன்  எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, தெனியாய மேல்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை நிகழ்விலும் மஹிந்த தேசப்பிரிய கலந்துகொண்டதோடு, ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தெனியாய 51 வது சந்தியில் இருந்து மக்களை தெளிவூட்டும் முகமாக இடம்பெற்ற நடைபவனியிலும் மஹிந்த தேசப்பிரிய கலந்துகொண்டுள்ளார்.

இறுதியாக, தெனியான – மத்தேயு பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்விலும் அவர் கலந்து கொண்டதோடு, குறித்த பாடசாலை பிரதான மண்டபத்தில் உரையாற்றியதோடு, மக்கள் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !