வவுனியா கற்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!
வவுனியா கற்குளம் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 101பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 31.12.2018 இன்று கற்குளம் பொதுநோக்கு மண்டப கட்டிடத்தில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு கண்ணன், இளைஞர் கழக உறுப்பினர்கள் திரு செளந்தரம்,திரு றஞ்சன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இக் கிராமமானது மீள் குடியேற்றம் செய்யப்பட்டு பத்து வருடங்கள் கடந்தும் தமெக்கன வீட்டுத்திட்டம் ஏதும் தரப்படவில்லை என்றும் வீதிகள் யாவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை TRT தமிழ் ஒலி வானொலியின் வெள்ள நிவாரண உதவித்திட்டத்தின் கீழ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.