வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம்

வவுனியாவில், குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் நல்நிலைக்கான பயணம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபயணம் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபயணம், 26ஆம் திகதி மாலை 3 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நிறைவடையவுள்ளது.

குறித்த நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வில், அரசஅதிபர் எம்.கனீபா, குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் லகிரு பெரேரா, சுகாதார வைத்திய அதிகாரி லவன், பிரதேச் செயலாளர் கா.உதயராஜா, அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு வரையுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைக் கடந்துச் சென்று, சமூக மத்தியில் உள்ள ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !