வவுனியாவில் மனித எச்சங்கள்! – பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியா சமளங்குளம் சுடுகாட்டிற்கு அண்மித்த பகுதியிலிருந்து மண்டை ஓடும் உடலின் எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சுடுகாட்டிற்கு மரணசடங்கு நிமித்தம் சென்ற மக்கள், அங்கு துர்நாற்றம் வீசியதையடுத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, மண்டை ஓடு, உடலின் சில எச்சங்கள், ஆடைகள் என்பன காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிஸார், எச்சங்களுக்கு அருகில் காணப்பட்ட பையை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில் காணப்பட்ட வைத்தியசாலையின் சான்றிதழ் ஒன்றில் பி.முத்தையா (வயது – 60) என்றும் உப்புக்குளத்தை வசிப்பிடமாக கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வவுனியா நீதவானுக்கு அறிவிக்கப்பட்டு, நீதவானின் உத்தரவின் பேரில் எச்சங்கள் மீட்கப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த மரணம் நிகழ்ந்த விதம் தொடர்பில் கண்டறியும் வகையில், வவுனியா வவுனியா குற்றதடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !