Main Menu

வவுனியாவில் சிறுமி திடீர் மரணம்: இரத்த மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்துள்ளார்.

வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடைய சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இதேவேளை. குறித்த சிறுமி கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு தொற்றுநீக்கல் செய்யப்பட்டுள்ளது.