வவுனியாவில் கிளிநொச்சி பெண் கைது!

வவுனியாவில் வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவரை நேற்று போதை தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரை சோதனையிட்டபோது கைப் பையினுள் பொதி செய்யப்பட்ட 200 கிராம் கேளரா கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் கிளிநொச்சியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் சம்பவ இடத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !