வவுனியாவில் ஒளவையார் நினைவு தினம் அனுஸ்டிப்பு

வவுனியா- சின்னப்புதுக்குளம் பகுதியில் ஒளவையார் நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது
இதன்போது ஒளவையாரின் நினைவுப் பேருரையை வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் நிறைமதி நிகழ்த்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒளவையாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நிகழ்வில் நகரசபையின் உப நகரபிதா சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், சு.கண்டீபன், சமந்தா செபநேசராணி, பாஸ்கரன் ஜெயவதனி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சுந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலர் விக்னா, நகரசபை ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.