வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து தொழிலாளரைக் காப்பாற்றிய ஹாலிவுட் நடிகர்

ஹாலிவுட் நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச், துணிச்சலுடன் லண்டன் தெருவில் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து ஒருவரைக் காப்பாற்றியுள்ளார்.

செர்லாக் என்கிற தொலைக்காட்சித் தொடரில் துப்பறியும் வீரரான செர்லாக் ஹோம்சாக நடித்துப் புகழ்பெற்றவர் பெனடிக்ட் கம்பர்பேட்ச். இவர் The Hobbit; Avengers Infinity War, The Imitation Game ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

லண்டனில் பெனடிக்டும் அவர் மனைவி சோபி ஹன்டரும் உபேர் வாடகைக் காரில் சென்றபோது மேரிலிபோன் மேட்டுத் தெருவில் மிதிவண்டியில் உணவு வழங்கச் சென்ற ஒருவரை வழிப்பறிக் கொள்ளையர்கள் 4பேர் தாக்கி மிதிவண்டியைப் பறிக்க முயன்றதைப் பார்த்துள்ளார்.

அப்போது காரை நிறுத்தித் துணிச்சலுடன் கீழே இறங்கிச் சென்ற பெனடிக்ட் வழிப்பறிக் கொள்ளையர்களை அடித்து விரட்டிவிட்டு மிதிவண்டிக்காரரைக் காப்பாற்றியுள்ளார்.

படத்தில் மட்டுமே வீரவசனம் பேசி சாகசங்களைச் செய்யும் நடிகர்கள் உள்ள காலத்தில், கொடுமை கண்டு வெகுண்டெழுந்து வழிப்பறிக்கொள்ளையர்களை அடித்துவிரட்டித் தொழிலாளரைக் காப்பாற்றிய பெனடிக்ட் கம்பர்பேட்ச் உண்மை வாழ்விலும் வீரனாகவே திகழ்கிறார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !