வறட்சியான சருமம் உடையவர்கள் செய்யக் கூடாதவை?

நம்மில் பலருக்கும் வறட்சியான சருமம் இருக்கும். அப்படி வறட்சியான சருமம் உள்ளவர்கள் சில விஷயங்களை செய்யக் கூடாது. அப்படி எந்த மாதிரியான விஷயத்தை அவர்க செய்யக் கூடாது?

நம்மில் பலருக்கும் வறட்சியான சருமம்இருக்கும். அப்படி வறட்சியான சருமம்உள்ளவர்கள் சில விஷயங்களை செய்யக் கூடாது. அப்படி எந்த மாதிரியான விஷயத்தை அவர்க செய்யக் கூடாது?

வறட்சியான சருமம் கொண்டவர்கள், அடிக்கடி முகத்தைக் கழுவக் கூடாது. குறிப்பாக சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இது வறட்சியை மேன்மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே அளவுக்கு அதிகமான சரும வறட்சியைக் கொண்டவர்கள், ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் முகத்தை நீரில் கழுவக்கூடாது

சோப்புக்களில் அதிகப்படியான அமிலம் அல்லது pH அளவு அதிகமாக இருக்கும் சோப்புக்களைப் பயன்படுத்தக்கூடாது. வேண்டுமானால் கிளிசரின் கொண்ட சோப்புக்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது சருமத்தை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும்.

சூடான நீரில் குளிக்கக்கூடாது. அப்படி குளித்தால், அது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை முற்றிலும் வெளியேற்றி, சரும வறட்சியை மேன்மேலும் அதிகரிக்கும். எனவே குளிர்ந்த அல்ல வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வேண்டும்.

வறட்சியான சருமம் கொண்ட ஆண்கள் ஆப்டர் ஷேவ் லோசனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக pH அளவு அதிகம் கொண்ட லோசனைப் பயன்படுத்தவே கூடாது. வேண்டுமானால் pH குறைவாக உள்ள மற்றும் கிளிசரின் அல்லது கற்றாழை ஜெல் கொண்ட ஆப்டர் ஷேவ் லோசனைப் பயன்படுத்தலாம்.

டோனர்களும் சருமத்தை மேலும் வறட்சியடையச் செய்யும். எனவே வறட்சியான சருமம் உள்ளவர்கள் டோனரை தினமும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சருமம் அதிகம் வறட்சியடைவதற்கு போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருப்பதும் ஓர் காரணம். எனவே வறட்சியான சருமம் உள்ளவர்கள், தினமும் தவறாமல் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டியது அவசியம்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !