Main Menu

வர்த்தகப் போட்டியில் எந்தத் தரப்பும் வெல்லப் போவதில்லை: சீனா

அமெரிக்க – சீன வர்த்தகப் போட்டியில் எந்தத் தரப்பும் வெல்லப்போவதில்லை என்று பெய்ச்சிங் தெரிவித்துள்ளது.

சீன இறக்குமதிக்குக் கூடுதலாகப் 10 விழுக்காடு வரி விதிக்கவுள்ளதாகத் திரு. டிரம்ப் அறிவித்துள்ள வேளையில் சீனா அவ்வாறு சொன்னது.

அமெரிக்க – சீனப் பொருளியல், வர்த்தக ஒத்துழைப்பு இருதரப்புக்கும் பயனளிக்கக்கூடியது என்று நம்புவதாக வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகப் பேச்சாளர் லியூ பெங்யூ (Liu Pengyu) கூறினார்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தலைச் சீனா தடுக்கும் வரை வரிகளை விதிக்கப்போவதாகத் திரு டிரம்ப் கூறியிருந்தார்.

போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க அமெரிக்காவும் சீனாவும் சென்ற ஆண்டு ஓர் உடன்பாடு செய்துகொண்டன. அதைச் சுட்டிய திரு லியூ போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க அமெரிக்க அமலாக்கத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதாகச் சொன்னார்.

பகிரவும்...
0Shares