வரலாற்று சந்திப்பை நிறைவுசெய்து பியோங்யாங்கை சென்றடைந்தார் கிம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்து, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நாட்டை சென்றடைந்துள்ளார்.

ஏர் சீன விமானத்தின் மூலம், கிம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பியோங்யாங்கிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இது தொடர்பான ஒளிப்படங்களை சிங்கப்பூர் தகவல்தொடர்பு மற்றும் தகவல் அமைச்சு வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் கல்வியமைச்சர் ஒங் யே கொங் ஆகியோர் விமானம் நிலையத்திற்கு வந்து, கிம்மை வழியனுப்பி வைத்துள்ளனர்.

பல போராட்டத்திற்கு மத்தியில் உலக நாடுகளின் எதிர்பார்ப்புமிக்க வரலாற்று முக்கியம்வாய்ந்த ட்ரம்ப்-கிம் சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் இடம்பெற்றது.

இதன்போது, கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத பாவனையை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய ஆவணத்தில் இருநாட்டு தலைவர்களும் கைச்சாத்திட்டதுடன், வடகொரியாவின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !