வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு முதல் நேரடி விமானம்!
வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு முதல் நேரடி விமானம் சென்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து நேற்று (புதன்கிழமை) இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான விமானம் பல்வேறு முக்கிய அதிகாரிகளுடன் நேற்று பஹ்ரைன் நாட்டை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் முக்கிய அதிகாரிகளும், இஸ்ரேல் பிரதமரின் முக்கிய அதிகாரிகளும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைதி ஒப்பந்தத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் விமானப்போக்குவரத்து பஹ்ரைன் நாட்டுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை நிலைநாட்ட உதவும் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளும் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயற்பட சம்மதம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்கும் பஹ்ரைன் நாட்டிற்கும் இடையே முதல் முறையாக நேரடி விமானப்போக்குவரத்து நடைபெற்றுள்ள நிகழ்வு மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என நம்பப்படுகின்றது.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஏற்கனவே நேரடி விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 15ஆம் திகதி வெள்ளைமாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன.