Main Menu

வரலாற்றில்முக்கியத்துவம்வாய்ந்தநிகழ்வுகள்-30

பூதத்தம்பிவளைவாகமாறியசங்கிலித்தோப்பு
சங்கிலித்தோப்பு அல்லதுபூதத்தம்பிவளைவுஎன்பது இலங்கையின்; வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாணஅரசின்கடைசி மன்னனான சங்கிலியனின்மாளிகைஅமைந்திருந்த இடம்எனக்கருதப்படுகின்றது. தற்காலத்தில்பல்வேறுபயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்ட இந்நிலப்பகுதியின்வரலாற்றுமுக்கியத்துவத்துக்கானகுறியீடுகளாகஇருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக்குறிப்பிடப்படுகின்ற கட்டிட மொன்றின் வாயில்வளைவும், அதற்கு ப்பின்புறமாக உள்ள யமுனாஏரி எனப்படும் பகரவடிவக்கேணியும்ஆகும் .சங்கிலித்தோப்பு, யாழ்ப்பாணநகரில்இருந்துசுமார் மூன்றுகிலோ மீற்றர்தூரத்தில் நல்லூரில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் ,நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் சங்கிலித்தோப்பு வளைவும், இவ்வீதியின் ஓரமாக அமைந்துள்ளது. இது முற்குறிப்பிட்ட யமுனா ஏரியிலிருந்து சற்றுத் தொலைவில் ,பிற்காலத்தில் உருவான குடியேற்றப்பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதைக் காணலாம். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதிக்கு அடுத்தபக்கத்தில், சங்கிலித்தோப்புக்கு எதிராகவேஅரசர்காலத்து இடமான, மந்திரிமனைஉள்ளது. இதற்குஅருகிலேயே யாழ்ப்பாண அரசர்களால் அமைக்கப் பட்ட சட்டநாதர் சிவன்கோயிலும் காணப்படுகின்றது. இது தவிர யாழ்ப்பாண அரசர்காலத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் அமைந்திருந்த இடமும், ஆரம்பத்தில் இவ்விடத்துக்கு அருகிலேயே இருந்தது..
போத்துக்கீசர் 1620 இல் யாழ்ப்பாணத்தை முழுமை யாகக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியில் கொண்டுவந்த பின்னர், அதன் தலைநகரத்தை யாழ்ப்பாண நகரத்துக்கு மாற்றினர். நல்லூரிலிருந்த யாழ்ப்பாணத்து அரசர்களுக்குச் சொந்தமான நிலங்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணத் தமிழரசு, ஒல்லாந்தர் கைக்கு மாறியபின்னர், சங்கிலித்தோப்புப் பகுதியில் அதற்குச் சிறிதுதூரத்தில் அவர்களுடைய சமயக் கல்விக்கான நிறுவனம்ஒன்றுஅமைக்கப்பட்டிருந்தது.

இதுவே தற்போது செம்மணி வீதியில் அமைந்திருக்கும் சென். ஜேம்ஸ் தேவாலயமாகும்…!

இங்கேகாணப்படும்வாயில்வளைவு, சங்கிலியன் தோப்பு என்று தற்போது அழைக்கப்பட்டா லும், சிலஆய்வாளர்கள்இதனை 1515 இல் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த சங்கிலிமன்னனின் வளைவு என்றும் கறிப்பிடுகின்றனர். இது சங்கிலியனின் அரண்மனையின் அலங்கார நுழைவாயில் வளைவு என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால்கலாநிதிக.குணராசாஅவர்கள்,சங்கிலியனின்ஆட்சிக்குப்பின்னர், 1830 களில் ஒல்லாந்தர் காலத்தில் அவர்களுக்கு வரிகளை வசூலிக்கும் நிர்வாகியாக இருந்த பூதத்தம்பி முதலியார் என்பவரின் தலைமைச்செயலகமாக இருந்ததால் இது பூதத்தம்பி வளைவு என்றும்அழைக்கப்படு வதாக குறிப்பிடு கின்றார்.

இன்றும்யாழ்ப்பாணத்தில்கிராமங்களில்நடைபெற்றுவரும் “பூதத்தம்பி” நாட்டுக் கூத்து இவரது வரலாற்றைக் கnhண்டதாக நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நாடகத்தில் கதாநாயகனாக டொன்லூயிஸ் பூதத்தம்பியும் (Don Lewis Poothathamby) என்ற ஒல்லாந்தரின் அரசஅதிகாரியும், ஒல்லாந்தரின் அரச அதிகாரியான “டொன்மனுவல்அன்றாடோ”(Don Manuel Andrado)வும் வில்லனாக கதாபாத்திரங்களாக ச்சித்திரிக்க ப்பட்டுளளனர். .இருவரும் தமிழ் சமுகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் அற்பபதவிகளுக்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறித் தமது பெயர்களையும் டச்சுப்பெயர்களாகவே மாற்றி யிருந்தனர். அன்றுஅத்தகைய தமழின விரோத சக்தி கள் பதவி, பட்டங்க ளுக்காக எவ்வாறுதமது இனத்திற்கு எதிராகவே செயற்பட்டார்களோ அவ்வாறே கொண்ட கொள்கைகளைத் தூக்கி எறிந்துவிட்டு பதவிகளுக்காகவே அரசுடன் சேருபவர்களின் வரலாறுகள் இன்றும்தொடருகின்றன.
பூதத்தம்பி முதலியாரின்அழகான மனைவிமீது காதல்கொண்ட அன்றாடோவின்காதலைஅவள்நிராகரித்ததால்கோபமடைந்தஅன்றாடோபோர்த்துக்கேயரிடம், பூதத்தம்பியைப்பற்றிய பொய்யான குற்றச்சாட்டுக்களைக்கூறிஇ,அவனைப்பதவியில்இருந்தும்வெளியேற்றுவித்தான். சங்கிலியன, தோப்பு வளைவு டன்நெருங்கிய தொடர்புடையதாக இந்தச்சுவார ஸ்யமானகதைஇன்றும்யாழ்ப்பாணப்பிரதேசங்களில்நாடகமாகநடிக்கப்பட்டுவருகின்றது.இத்தகையசுவாசியமானவரலாற்றையாழ்ப்பாணச்சரித்திரத்துடன்தொடர்பு படுத்திபிற்காலத்தில் 1905 ஆம்ஆண்டில்இளம்சட்டத்தரணியானகதிரேசுஎன்பவரால், “யாழ்ப்பாணக் குடாநாட்டின்கையேடு”(Handbook to the Jaffna Peninsula), என்ற நூலை வெளியிட்டு வைத்தார். இதில் அவரால் குறிப்பிடப்பட்ட அந்த சுவாரசியமான வரலாறேநாடகஎழுத்துருவாகவும்தயாரிக்கப்பட்டது. அதனாலேயே பிற்காலத்தில் “சங்கிலியன்தோப்பு” வளைவுஎன்பது “பூதத்ததம்பி வளைவு” எனவும் அழைக்கப் பட்டது. ஆனால்மக்களின்மனதில்சங்கிலியன்தோப்புஎன்ற பெயரே இன்றும் நிலைத்திருக்கின்றமையானது ஈழத்தமிழர்களின் உண்மையான வரலாற்றை எவராலும் அழித்துவிடமுடியாது என்பதைத் தான் புலப்படுத்து கின்றது.
ஆயினும்யாழ்பபாணஅரசுஒன்றுஇருந்தமைக்கானஆதாரமாகவிளங்கும்சங்கிலியன்தோப்பும்,அதனைத்தொடர்ந்திருக்கும்யமுனாஏரியும்,மந்திரிமனையும்தமிழர்மரபுரிமைச்சொத்தாகப்பேணப்படுவதையும்அழிந்துவிடாதுபாதுகாப்பதையும்வடக்குமாகாணமும்,யாழ்ப்பாணமாநகரசபையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பகிரவும்...
0Shares