வயோதிபர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம்!
நாட்டில் உள்ள வயோதிபர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவறுத்தியுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட நாள் நோயாளர்கள் போன்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமாயின் அபாய நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றாளர்கள் 468 பேர் நேற்று அடையாளங் காணப்பட்ட நிலையில் அவர்களுள் பெருமளவிலானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 282 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.