வன்முறை போராட்டங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்: பிரான்ஸ் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

வன்முறை போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலான சட்டமூலம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களாக தொடர்ந்த யெலோ வெஸ்ட் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலியாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இப்புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டமூலம் தேசிய சட்டசபையில் 387 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் மேல்சபையில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் சட்டசபையின் தீர்மானமே இறுதியானது.

ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் எரிபொருள் வரி சீர்த்திருத்தத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த நவம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முடிவின்றி தொடர்ந்து வந்தது.

மூன்று மாதங்களாக தொடர்ந்துவரும் இவ்வன்முறை போராட்டத்தில் பொருட் சேதங்கள் மாத்திரமின்றி உயிர் சேதங்கள் பலவும் பதிவாகின.

பிரான்ஸ் தலைநகரில் கடந்த 1968ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறை போராட்டத்தை தொடர்ந்து, பல தசாப்தங்களின் பின்னர் வெடித்த கொடிய போராட்டமாக இந்த யெலோ வெஸ்ட் போராட்டம் பார்க்கப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !