வன்முறைகளை கட்டுப்படுத்த விமானப் படையின் உலங்கு வானூர்திகள்
வன்முறைகளை கட்டுப்படுத்த உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போது பேச்சாளர் இதுதொடர்பாக தெரிவித்தார்.
வன்முறைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்ததும் அந்தப் பிரதேசங்களுக்கு உடனடியாக ஹெலிகொப்டர்களை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாரே பதியவும் ஹெலி மூலம் துருப்புக்களை இறக்கி நிலைமையை கட்டுப்படுத்தவும் விமானப் படைத் தளபதி தீர்மானித்துள்ளதாக கூறினார்.