வன்கூவர் துறைமுகத்தில் தீ விபத்து: ஒருவர் படுகாயம்!
வன்கூவர் துறைமுகத்தில் தானியக் கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3:45 மணியளவில் அலையன்ஸ் தானிய முனையத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தின் போது ஊழியர்களில் ஒருவருக்கு இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக வன்கூவர் தீயணைப்பு மீட்பு சேவைகளுடன் உதவித் தலைவர் கென் ஜெம்மில் தெரிவித்தார்.
இந்த தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது மற்றும் சேதங்கள் குறித்த விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.