வத்திகானிலும் 1வது கொரோனா வைரஸ் தொற்று!
ஆயிரம் பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட வத்திகானிலும், முதலாவது கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.
மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்தார்.
நோயாளிக்கு பரிசோதித்த பின்னர் குறித்த மருத்துவமனை வெளிநோயாளர் சேவைகளை நிறுத்தியதாகக் கூறியுள்ளது.
அத்துடன், வத்திக்கானில் உள்ள மருத்துவ மையத்தில் அவரை அனுமதித்து கண்காணித்து வருவதாகவும் இந்த மருத்துவமனை ஆழமாக சுத்தம் செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பகிரவும்...