வதந்திகளை நம்ப வேண்டாம் – இளையராஜா வேண்டுகோள்

மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார்.
மேலும் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆண்டாள் சன்னதி, நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதிகளில் இளையராஜா தரிசனம் மேற்கொண்டார்.
முன்னதாக, ஆண்டாள் ஆலயத்தின் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே அவர் சுவாமி தரிசனம் செய்ததாகவும், ஆலயத்தின் மரியாதையை இளையராஜா ஏற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வைரலானது.
இந்தநிலையில் தன்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் “நான் எந்த நேரத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடிக்காத செய்திகளை சடந்ததாக பரப்புகின்றனர். இந்த வதந்திகளை இரசிகர்களும் மக்களும் நம்ப வேண்டாம்” என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
பகிரவும்...