வட மேல் மாகாணத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டம் தொடர்கிறது
வட மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கம்பஹா காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று (14.05.19) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, நாட்டின் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்குச் சட்டம் இன்று (14.05.19) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.