வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கைது!

வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி நீரியல் வளத்திணைக்களத்திற்கு எதிரில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஒன்பதாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குறித்த பகுதிக்கு சென்ற வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டாம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, நீரியல்வளத் திணைக்களத்தின் வாயிற்கதவு உடைக்கப்பட்டு, ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட அவர், அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரவிகரன் இன்று(வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவு நிதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !