வட.மாகாண ஆளுநருடன் நோர்வே தூதுவர் விசேட சந்திப்பு!

வட.மாகாண ஆளுநரை இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டட்சேத் (Thorbjørn Gaustadsæther) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் பிரயோக விஞ்ஞானத்துக்கான நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுத்தமான வலு மற்றும் சுகாதாரம் என்ற தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பணம் சென்றிருந்த நோர்வே தூதுவர் வடக்கு மகாண ஆளுநர் சுரேன் ராகவன், யாழ்ப்பாண பாதுகாப்பு படை அணிகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மற்றும் வட மாகாணத்துக்கான பிரதம செயலாளர் ஏ. பதிநாதன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன், யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் அவர்களையும் நோர்வே தூதுவர் சந்தித்திருந்தார்.

வட.மாகாணத்தில் காணப்படும் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பாகத் தெளிவான புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த சந்திப்புகள் நோர்வே தூதுவருக்கு உதவியாக அமைந்திருந்ததாக நோர்வே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !