வடமராட்சியில் மீன்பிடி படகு – கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிப்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதிதாக கரை வலையை கொள்வனவு செய்திருந்த அம்பன் கொட்டோடை பகுதியைச் சேர்ந்த கந்தன் சுரேந்திர ராசா என்பவர் நேற்றைய தினம் முதல் முதலாக தொழிலை மேற்கொண்டுவிட்டு படகு மற்றும் வலைகளை கடற்கரையில் வைத்து விட்டு வீடு சென்றுள்ள நிலையிலேயே இவ்வாறு இவ்வாறு அவரது பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயில் எரிந்து நாசமாகிய படகு மற்றும் வலைகளின் பெறுமதி சுமார் இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் மேல் எனவும் இது தொடர்பில் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.