வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் புதிய கட்டடம்
வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் கட்டடமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி- வத்ராஜன் பகுதியிலுள்ள தனிநபரொருவரது சொந்த காணியில், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த மைதானத்தை அமைப்பதற்கான செலவு, தனிநபர் ஒருவரின் நிதியின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மைதானத்தின் முன்பகுதியில், சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன் சீன தேசிய கொடியில் காணப்படுகின்ற ராகன் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை தற்போது மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.