வடக்கு மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமனம்!

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று (திங்கட்கிழமை) அவர் வடக்கு மாகாண ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யார் சுரேன் ராகவன்..??

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் கலாநிதி சுரேஷ் ராகவன் ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றார்.

2005 ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற இவர் 2008ஆம் ஆண்டு முதுகலைமாணி முடித்தார் பின்னர் 2008-2011 களில் பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசிலும் அவருக்கு வழங்கப்பட்டது.

கனடா – ஒன்றாரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதினை வென்ற அவர் நேரடி அரசியலில் பெரும் அனுபவசாலியாவார். இவர் தற்போது ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக உள்ளார்.

அத்தோடு அவர் மிக முக்கியமாக அவர் ஒரு பௌத்த சிந்தனைவாதியாவார், பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

அவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !