வடக்­கிற்கு பயணித்து பிரச்­சி­னை­களை கண்­ட­றி­யு­மாறு விக்­னேஸ்­வரன் விடுத்த அழைப்பை ஏற்கிறேன்

வடக்­கிற்கு பயணித்து மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றி­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் விடுத்த அழைப்பை தான் ஏற்­பதாக சமூக நலன்­புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி விக்­கி­னேஸ்­வரன் விடுத்த அழைப்­பிற்கு பதி­ல­ளிக்கும் முக­மாக அவர் நேற்று ஊட­கங்­க­ளுக்கு விடுத்த அறிக்­கையில் இவ்வாறு  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, “வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றிய வடக்­கிற்கு பயணம் செய்­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  ஊட­கங்கள் மூலம் அறி­வித்­தி­ருந்தார். ஆகவே வடக்கு முதல்­வரின் குறித்த அழைப்பை நான் ஏற்­கின்றேன்.

அதன் அடிப்படையில் சி.வி விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் இணைந்து வடக்கில் கண்­கா­ணிப்பு பயணம் ஒன்றை மேற்­கொள்ள நான் தயா­ராக உள்ளேன். அதற்கு திகதி நிர்ணயம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் வசதிகளையும் முதல்வர் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !