வடகொரிய தலைவரை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-ஐ சந்திக்கவுள்ளதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்தார்.

ஆனால், ஆயுத பாவனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற கடந்த கால முறியடிக்கப்பட்ட வாக்குறுதிகளை அனுமதிப்பது போன்ற தவறை ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் ஒருபோதும் இழைக்க மாட்டார் என பென்ஸ் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்துக் கொண்டிருந்த துணை ஜனாதிபதி, மாநாட்டை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், குறித்த சந்திப்பிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த துணை ஜனாதிபதி, எனினும் மேற்படி சந்திப்பு குறிப்பாக எப்போது, எங்கு நடைபெறும் என்பது இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த நிர்வாகங்களின் போது வாக்குறுதிகள் வழங்கப்படும், அதனை தொடர்ந்து தடைகள் நீக்கப்பட்டு, பொருளாதார ஒத்துழைப்புகள் பெருகும். ஆனால் பின்னர் வாக்குறுதிகள் முறியடிக்கப்படும். இவ்வாறாக செய்த தவறை மீண்டும் செய்ய தாம் விரும்பவில்லை எனவும் துணை ஜனாதிபதி குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !