வடகொரிய ஜனாதிபதி -அமெரிக்க ஜனாதிபதி: மீண்டும் சந்திப்பு?
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னுடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதி முன் ஜே இன்னை சந்திப்பதற்கு முன்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது, வடகொரியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கிம் ஜோன் உன்னுடன் இடம்பெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்தைகள் மூலம் பல முன்னேற்றங்களை பெற்றுள்ளதாகவும் டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.