வடகொரியாவுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ட்ரம்ப் தெரிவிப்பு

வடகொரியாவின் கோரிக்கைளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஒப்பந்தத்தில் இருந்து விலகவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் வடகொரியாவுக்கிடையிலான இரண்டாவது உச்சிமாநாடு நேற்றும் இன்றும் வியட்நாமில் இடம்பெற்றிருந்தது. உடன்பாடு எதுவும் எட்டப்படநிலையில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் சற்று முன்னர் மாநாட்டின் முடிவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தையும் இரத்து செய்து தத்தமது இடத்துக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் உடன்பாடு எட்டப்படாமைக்கான காரணத்தை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தன் மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் அணுவாயுத ஒழிப்பு திட்ட ஒப்பந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்படிக்கையினையும் ஏற்படுத்தி கொள்ளமுடியவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உச்சி மாநாட்டின் முடிவில் நாங்கள் நல்ல நண்பர்களாகியிருக்கிறோம் என நினைக்கிறேன். வடகொரியா நாங்கள் கோரிய சில விடயங்களை ஏற்றுக்கொண்டது, வடகொரியா சில இடங்களை அணு ஆயுதமற்ற பகுதியாக்க ஒப்புக்கொள்கிறது எனினும் நாம் விரும்பும் இடங்களில் அதை நடைமுறைப்படுத்த தயாராக இல்லை.  என ஜனாதிபதி ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !