வடகொரியாவிற்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் – பிரான்ஸ்!

வடகொரியா சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பதற்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டுமென, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லே ட்ரையன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடகொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்கள் மற்றும் தடைகளை மீறி தொடர் அணுவாயுத பரிசோதனைகளை முன்னெடுத்து வருகிறது.

இதன் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதுடன் அமெர்க்கா கடும் அதிருப்தியில் காணப்படுகிறது.

இந்த பதற்ற நிலைகளை களைவதற்கு சமாதானப் பேச்சுவார்ததைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லே ட்ரையன், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜியை நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்

இதன்போதே, சீன வெளிவிவகார அமைச்சரிடம் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

வடகொரியாவின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இராணுவத் தீர்வை எவரும் விரும்பமாட்டார்கள் எனவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !