வடகொரியாவிடம் அமெரிக்கா நட்டஈடு!

அமெரிக்க கல்லூரி மாணவன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக 501 மில்லியன் அமெரிக்க டொலரை நட்டஈடாக செலுத்துமாறு, வடகொரியாவிற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவனின் பெற்றோர் வடகொரியாவிற்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தனர்.

குறித்த வழக்கு கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்திற்கு வடகொரியாவே பொறுப்பு கூற வேண்டும் என நேற்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவை பலப்படுத்தும் நோக்கிலான சந்திப்புகள் இடம்பெற்று வருகின்ற முக்கிய தருணமொன்றில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

22 வயதான அமெரிக்க கல்லூரி மாணவனான ஒட்டோ வாம்பியர் வடகொரிய சிறையிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்படும் போது கோமா நிலையிலிருந்த மாணவன், விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே உயிரிழந்தார்.

ஒக்சீசன் மற்றும் மூளைக்கான இரத்த ஓட்டம் குறைவடைந்தமையினாலேயே குறித்த மாணவன் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளிலிருந்து கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !