லொஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு புரளி – சந்தேகநபர் கைது!

அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நுழைந்துவிட்டதாக வௌியான தகவலை அடுத்து பொலிஸார் அங்கிருந்த பொதுமக்களை வௌியேற்றியுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக்கத்திற்கிடமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் தமக்கு கிடைத்த தகவலின்படி ஒவ்வொரு அறையாக தேடியுள்ளனர். இருந்தபோதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை.

குறித்த மருத்துவமனை லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது. இதன்போது உண்மையான குற்றவாளி யார் என்பது தொடர்பாக பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

உள்ளுர் தொலைக்காட்சியொன்று ஒளிபரப்பிய காணொளியில், மருத்துவமனைக் கட்டிடத்திலிருந்து சிலர் கைகளை உயர்த்தியவாறு வௌியேறுகின்றனர். பொலிஸார் அவர்களை வரிசையில் ஒழுங்குபடுத்தி அனுப்புவதுடன், தீயணைப்பு வாகனங்களும் மருத்துவமனையை சூழ தரித்துவைக்கப்பட்டுள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !