லைக்காவின் மற்றுமொரு பிரம்மாண்ட தயாரிப்பிற்கு பூஜை!

லைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் தொடக்கவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்னையில் நடைபெற்றது.

கடந்த 1996-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான ‘இந்தியன்’ படம் வசூலைக் குவித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2-வது பாகத்தை 22 வருடங்களுக்குப் பின்பு இயக்குநர் ஷங்கர் தற்போது இயக்குகிறார்.

கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.

படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று பூஜையுடன் படத்தின் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் நிறுவுனர் அல்லிராஜா சுபாஸ்கரன், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் மற்றும் படக்குழுவினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !