லெபனான் எரிபொருள் தொட்டி வெடிப்பில் குறைந்தது 20 பேர் உயிரிழப்பு
வடக்கு லெபனானில் உள்ள அக்காரில் எரிபொருள் தொட்டி வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தின் போது சுமார் 200 பேர் அருகில் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறைந்தது 79 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான எரிபொருள் பற்றாக்குறை காணப்படும் லெபனானில் வைத்தியசாலைகளில் எரிபொருள் குறைவாக இருப்பதாகவும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.