Main Menu

லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 57 பேர் பலி

லெபனானில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர்.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இராணுவம் லெபனானில் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கிழக்கு லெபனானில் உள்ள ஹெர்மல் பகுதியில் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் மொத்தம் 57 பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க அல்-மான்ஷியா கட்டிடம் முழுவதும் இத் தாக்குதலில் சேதமடைந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பகிரவும்...
0Shares