லெனின்கிராட் முற்றுகை முடிவுறுத்தப்பட்டு 75 வருடங்கள்!

ரஷ்ய வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய முற்றுகைக் போராட்டமான லெனின்கிராட் (முற்றுகை கைவிடப்பட்டு இன்றுடன் 75 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

அதனை நினைவுகூர்ந்து சயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் பாரிய இராணுவ அணிவகுப்பொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

சுமார் 100 இராணுவ வாகனங்கள் சகிதம் 2,500 துருப்புக்கள் குறித்த அணிவகுப்பில் பங்கேற்றன.

ரஷ்ய படைகளுக்கு எதிராக நாசிப்படைகள் முன்னெடுத்த மிகப்பெரிய முற்றுகையின்போது இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பட்டினி மற்றும் தாக்குதல்களில் இந்த பாரிய உயரிழப்பு நேர்ந்தது.

ரஷ்ய வரலாற்றில் பதிவான மிக மோசமான இந்த சம்பவம், 872 நாட்களுக்கு பின்னர் கடந்த 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி முடிவுறுத்தப்பட்டது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !