லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி
லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலியாகி உள்ளனர்.
காயமடைந்தவரை மீட்டு வரும் மீட்புக் குழுவினர்வியன்டியன்:
லாவோஸ் நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. நேற்று இரவு நடந்த இந்த விபத்தில், 8 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயமடைந்து உள்ளனர். 8 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பேருந்தில் சீனாவை சேர்ந்த 43 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களுடன் சீன சுற்றுலா உதவியாளர் ஒருவர் மற்றும் லாவோஸ் நாட்டை சேர்ந்த ஓட்டுனர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியோரும் பயணித்துள்ளனர்.
பேருந்தின் பிரேக் பிடிக்கவில்லை என்றும் அதனால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவம் பற்றி அறிந்து லாவோஸ் நாட்டில் உள்ள சீன தூதரக ஊழியர்கள் மற்றும் லுவாங் பிரபாங்கில் உள்ள சீன தூதர் விபத்து பகுதிக்கு சென்றனர்.