லண்டன் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் சிறிய குண்டுகள் கண்டுபிடிப்பு!

லண்டனின் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையமொன்றில் மூன்று சிறிய குண்டுகள் அடங்கிய பொதிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

லண்டன் சிற்றி விமான நிலையம், ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் வோட்டர்லூ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இப்பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்பொதிகள் மூன்றும் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டதாகவும் இப்பொதிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளினால் எவரும் பாதிக்கப்படவில்லையெனவும் சேவைகள் எதுவும் இடையூறுகளுக்கு உள்ளாகவில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !