லண்டன் இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்

டிக்கெட் கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் அவர்கள் கருத்து பதிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் 16 இந்தி பாடல்களையும், 12 தமிழ் பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியதாக கூறப்படுகிறது.

இந்த சர்ச்சை குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்தார். அதில் அவர், “ஏ.ஆர்.ரகுமான் ஒரு மேதாவி. கடவுள் பக்தி உள்ளவர். சட்டங்களை மதிப்பவர். நமது நாட்டின் பெருமைக்குரிய மனிதர். அவரது நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்கள் ஏன் வெளியேறினார்கள் என்பது விவாதத்துக்குரியது அல்ல. இங்கு மொழி என்ற வேலி தேவை இல்லை. இதுபோன்ற எல்லையில் இருந்து எந்த கலை வடிவமும் விலகியே இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சினிமா பின்னணி பாடகி சின்மயி கூறும்போது, “ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கர் விருதுகள் வெல்லும்போது இந்தியன். ஆனால், 7, 8 தமிழ் பாடல்களை பாடினால்…? அவரது இசை நிகழ்ச்சியில் 65 சதவீதம் இந்தி பாடல்கள்தான் இருந்தன. இசைக்கு எல்லை இல்லை. மொழியும் கிடையாது. இந்தியாவை அடிமைபடுத்திய பிரிட்டிஷ் நாட்டில் வாழுங்கள். ஆனால் தமிழ் பாடல்களை கேட்டால் புலம்புங்கள்.

நாங்கள் தேவையானபோது இந்தி கற்று இருக்கிறோம். ஆனால் வடக்கு பகுதியில் இருப்பவர்கள் தங்கள் தாய் மொழியை தாண்டி எதையும் கற்பது இல்லை” என்றார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமானிடம் லண்டன் இசை நிகழ்ச்சியில் இருந்து இந்தி ரசிகர்கள் வெளியேறியது பற்றி நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது “ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களுக்கு நிறைய கடமைப்பட்டு இருக்கிறேன். எங்கள் இசைக்குழு சிறப்பான பாடல்களை தர முயன்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நேர்மையாகவே நடந்து கொண்டோம்” என்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !