லண்டனில் லெய்சஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் லெய்சஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளரான தாய்லாந்து தொழிலதிபர் விச்சை ஸ்ரீவதனபிரபா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். லெய்சஸ்டர் கிங் பவர் அரங்கில் லெய்சஸ்டர் அணி பங்கேற்ற கால்பந்தாட்டம் முடிந்த சில நிமிடங்களில், மைதானத்திற்கு மிகவும் அருகாமையில் அவர் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் ஸ்ரீவதனபிரபாவுடன் அவரது மகள், இரண்டு விமானிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மைதானத்தின் அருகே ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் ஸ்டேடியம் முன்பு நெருப்புப்புகை மூண்டது. போட்டியை பார்த்து விட்டு வெளியே சென்றுக் கொண்டு இருந்த கால்பந்து ரசிகர்கள் இதனைக்கண்டு அச்சமடைந்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஹெலிகாப்டரில் உள்ள றெக்கைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !