லண்டனில் பாடசாலையொன்றில் பாரிய தீ – தீயணைப்பு படையினர் குவிப்பு!

கிழக்கு லண்டன் – டஹேன்ஹம் பகுதியில் உள்ள பெரிய முதன்மை பாடசாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை அடுத்து அங்கு பெருமளவான தீயணைப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய நேரப்படும் அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தை தொடர்ந்து 12 தீயணைப்பு இயந்திரங்களும், 80 தீயணைப்பு படையினரும் அங்கு அழைக்கப்பட்டனர்.

குறித்த பகுதியில் உள்ள பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை எனவும் லண்டன் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !