லண்டனில் காரல்மார்க்ஸ் கல்லறை இடித்து சேதம்

அவரது கல்லறை வடக்கு லண்டனில் உள்ளது. அங்கு அது நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மார்க்ஸ் கிரேவ் டிரஸ்டுக்கு சொந்தமானது. இந்த கல்லறையை யாரோ மர்ம கும்பல் இடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

கல்லறையில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டும் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 1880-ம் ஆண்டுகளில் இக்கல்லறை சேதப்படுத்தப்பட்டு பின்னர் சீரமைக்கப்பட்டது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !