லசந்தவை கொலை செய்தது யாரென அவரின் மகளிடமே கூறுவேன் – கோட்டாபய

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யாரென தனக்கு தெரியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு தனது தந்தையைக் கொலை செய்தவர் யாரென அறிய வேண்டுமானால் லசந்தவின் மகள் இலங்கைக்கு வந்து தன்னை சந்திக்க வெண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது யாரென அனைவருக்கும் தெரியும்.

ஆனால், எவரும்  முறையான விசாரணைகளை நடத்தி குற்றவாளியைத் தண்டிக்கத் தயாராக இல்லை.

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு அரசாங்கத்துக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. எனினும் அவர்கள் பொய் கூறுகின்றனர்.

தனது தந்தையைக் கொலை செய்தவர் யாரென அறிய வேண்டுமானால், லசந்தவின் மகள் என்னைச்  சந்திக்க வேண்டும். என்ன நடந்தது என்று நான் அவருக்கு கூறுவேன்.

ஆனால் அதனை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை. அந்தக் கட்டத்திலேயே நாங்கள் விசாரணையை நிறுத்தினோம்” என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !