ரொறான்ரோவில் விபத்து இருவர் காயம்.!

ரொறான்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவமானது வடக்கு ரொறான்ரோ பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதியதாலேயே இந்த கோர விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஒன்ராறியோ மாகாணப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் காயமடைந்த நபர் 49 வயது மதிக்கதக்கவர் என்றும் பார்ரி பகுதியை சேந்தவர் எனவும் ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை மற்றைய வாகனத்தை செலுத்திய பெண் சாரதி சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ மாகாணப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !